என்னைத் தெரியுமா

'))




அன்பு நண்பர்களே !

ஈழத்தைத் தாயகமாகக் கொண்டவன் நான். 18 வயதிலே மேற்படிப்புத் தேடி தாய்கத்தை விட்டுப் புலம் பெயர்ந்து லண்டன் வந்து சேர்ந்தவன்.

வாழ்க்கைத்துணையை லண்டனிலே கண்டதினால் தொடர்ந்த வாழ்க்கையையும் லண்டனிலே கழிப்பவன்.

மனைவியின் சொந்த ஊர் திருநெல்வேலி, தமிழ்நாடு.

ஒர்ரெயொரு ஆண்மகன் தற்போது லண்டன் மருத்துவக் கல்லூரியில் நான்காவது ஆண்டு மாணவனாக வலம் வருகின்றான்.

தமிழையும் எழுத்தையும் எனது இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்து வருபவன் நான்.

இதைத்தவிர என்னைப்பற்றிப் பெரிதாகச் சொல்ல எதுவுமேயில்லை.

அன்புடன்
சக்தி சக்திதாசன்